Mnadu News

கேரள அரசின் அத்துமீறலுக்கு திமுக அரசு துணைபோவதாக சீமான் குற்றச்சாட்டு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுவாணி ஆற்றின் குறுக்கே அடுத்தடுத்து 3 தடுப்பணைகள் கட்டும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.அதே நேரம், கேரள அரசின் எதேச்சதிகாரப் போக்கினைத் தடுக்கத் தவறி, வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.அதோடு, கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கேரள மாநில அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்? கேரள அரசு மீது எவ்வித நடவடிக்கையும், சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்?.அதோடு மட்டுமின்றி, சிறுவாணி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் திமுக அரசின் செயல் பச்சைத்துரோகம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends