Mnadu News

கேரள பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர் ரவுஃப் கைது.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இதை.யடுத்து இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரளம் மாநில தலைவராக இருந்து வந்த ரவுஃப்பை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாலக்காடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த ரவுஃப்பை கைது செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள் கொச்சியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends