Mnadu News

“கைதி 2” உறுதி! ஷூட்டிங் எப்போ தெரியுமா?

“மாநகரம்” திரைப்படத்துக்கு பிறகு குறுகிய காலத்தில் குறுகிய பட்ஜெட்டில் உருவாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து அனைத்து மொழி ஹீரோக்களையும் யார் இந்த இயக்குநர் என திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய படம் “கைதி”.

கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் போன்ற பலர் நடிப்பில் வெளியாகி அனைவருக்கும் ஒரு புதிய பாதையை உருவாக்கி தந்த படம் கைதி. சிறையில் இருந்து வெளிவரும் கைதி தனது மகளை சந்திப்பதற்குள் நிகழும் போராட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய சம்பவங்களே கதை.

இந்த நிலையில், நேற்று சர்தார் பட வெற்றி விழா நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் கார்த்தி, லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் பிஸியாக இருப்பதால் அடுத்த வருடம் கைதி 2 பட பணிகள் துவங்கும் என உறுதியாக கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More