Mnadu News

கொங்கு மக்கள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

திமுக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் தொகுதியில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் திமுக கட்சியின் வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் வெளியிட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் கொமதேக வேட்பாளராக சின்ராஜ் போட்டியிடுவதாக கொமதேக கட்சியின் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சின்ராஜ் தமிழ்நாடு கோழிப்பண்ணையின் தலைவராகவும் உள்ளார். நாமக்கலில் அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் ஒரு வேளை மாற்று வேட்பாளரை அறிவித்திருக்கலாம்.

Share this post with your friends