இந்தியாவில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய கடற் பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி கொச்சி கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஈரானிய மீன்பிடிப் படகை மடக்கி இந்திய கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் 200 கிலோ அளவிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஆயிரத்து 200 கோடி ரூபாயாகும். இதுதொடர்பாக 6 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரும் ஈரானின் கொனாரக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து 3 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More