Mnadu News

கொடியேற்றத்துடன் தொடங்கிய சனீஸ்வர பகவான் கோயில் பிரம்மோற்சவம்.

உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா 18 நாள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தியாகராஜர் ஆட்டம் எனப்படும் உன்மத்த நடனம் வருகிற 27-ஆம் தேதியும், தேரோட்டம் 30-ஆம்; தேதியும், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா 31-ஆம் தேதியும் நடக்கிறது. நிறைவாக தெப்ப உற்சவம் ஜூன் மாதம் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Share this post with your friends