Mnadu News

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் திட்டம் தொடக்கம்.

மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படும் கொடைக்கானலின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசிக்க ஆண்டுதோறும் பல லட்ச சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சீசன் களங்களில் வரும் சுற்றுலா பயணிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது தங்கும் அறைகளும், நகரின் முக்கிய இடங்களை சுற்றி பார்க்க போதுமான வாகன வசதி இல்லாததும் தான்.இந்நிலையில், பொது போக்குவரத்து உதவியுடன் கொடைக்கானலை சுற்றிபார்க்கும் விதமாக புதிய திட்டத்தை அரசு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. அதன்படி கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா வழியாக ஏரியில் சுற்றுலா பயணிகளை இறக்கி விடுகிறது. இதற்காக பெரியவர்களுக்கு 150-ரூபாயும், சிறியவர்களுக்கு 75-ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதற்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Share this post with your friends