கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும் அதிகம். புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சீதோஷ்ண நிலை மாற்றம், மழையால் விளைச்சல் 70 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ பச்சை பூண்டு 70 ரூபாய்க்கும், புகை மூட்டம் செய்யப்பட்ட பூண்டு ஒரு கிலோ 280 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனையாகிறது.விளைச்சல் குறைந்தாலும், போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More