Mnadu News

“கொரோனா காலத்தில் மக்களை பாஜக துன்புறுத்தியது” – ராகுல்காந்தி

பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மராட்டியத்தின் பந்தாரா மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது தெரிவித்த அவர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் வெறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்களும், கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி.யை செலுத்தும் நிலை உள்ளது என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, நாட்டின் எதிர்காலத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது என்று கருத்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெறும் மதத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன என்று விமர்சித்த ராகுல் காந்தி கொரோனா பெருந்தொற்று நாட்களில் சாதாரண மக்கள் மருத்துவ உதவிக்காக வேண்டினார்கள். அவர்களிடம் பாத்திரங்களை தட்டுமாறும், செல்போன் டார்ச் அடிக்குமாறும் மோடி கேட்டுக்கொண்டார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More