Mnadu News

கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் இதோ! யாருக்கு முதலிடம்!

விஜய்: 

பிகில், மாஸ்டர், வாரிசு என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். இவரின் கால்ஷீட் கிடைத்தால் போதும் எவ்வளவு கேட்டாலும் தருகிறேன் என தயாரிப்பாளர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். தற்போது இருக்கும் ஹீரோக்களில் அதிக சம்பளம் வாங்கும் முதல் ஹீரோ இவரே. ஆம், விஜய் 68 படத்துக்காக இவருக்கு பேசப்பட்டு உள்ள சம்பளம் ₹150 கோடிகள் என சொல்லப்படுகிறது. இவர் தான் சம்பளம் அதிகமாக வாங்கும் ஹீரோக்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 

ரஜினி : 

தர்பார், அண்ணாத்த படங்கள் ஓரளவுக்கு வெற்றியை மட்டுமே பெற்றாலும் தொடர்ந்து இவரின் ஸ்டார் அந்தஸ்த்து குறையாமலேயே உள்ளது. ஆம், தற்போது ஜெயிலர், லால் சலாம், தலைவர் 171 என பரபரப்பாக விட்ட இடத்தை பிடிக்க இயங்கி வருகிறார் ரஜினி. இவருக்கு தற்போது கொடுக்கப்படும் சம்பளம் ₹110 கோடிகளாகும்.  ஜெயிலர் படம் தற்போது பிளாக் பாஸ்டர் வெற்றியை பதிவு செய்து உள்ளதால், ரஜினியின் சம்பளம் 200 கோடிகள் வரை உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இது நிகழ்ந்தால் விஜய்யை மீண்டும் ரஜினி முந்தி விடுவார்.

அஜித் : 

துணிவு திரைபடத்தின் அசுர வெற்றி அஜித்தின் மார்கெட்டை வேறு ஒரு உச்சத்தில் கொண்டு நிறுத்தி உள்ளது. ஆம், விடாமுயற்சி படத்துக்காக அஜித் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் ₹105 கோடிகள். இந்த படம் பிளாக் ஆனால் அஜித்தின் மார்கெட் யாரும் எதிர்பார்க்காத உயர்வு காணும் எனவும் திரை வல்லுனர்கள் கூறுகின்றனர். 

கமல் : 

விக்ரம் என்ற ஒற்றை படத்தின் மூலம் பல கோடிகளை அள்ளியவர் உலக நாயகன் கமல். கமர்ஷியல் ஹீரோ கமல் இல்லை என பலரும் கூறி வந்த நிலையில், அதை உடைத்து காட்டினார். தற்போது, இவர் வாங்கும் சம்பளம் ₹50 கோடிகள் என சொல்லப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்து இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலை அள்ளினால் கமல் மார்கெட் ஜெட் வேகத்தில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெயம் ரவி : 

பொன்னியின் செல்வன் அமோக வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி கேரியர் ஏறுமுகம் தான். ஆம், தற்போது இவரின் நடிப்பில் 6 படங்கள் லைன் அப்பில் உள்ளன. அதே போல தற்போது இவரின் சம்பளம் ₹30 கோடி என கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆறு படங்களும் இவருக்கு கை கொடுத்தால் இன்னும் இவரின் சந்தை மதிப்பு உயரும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.  இது இப்போதைய மார்கெட் அடிப்படையில் உள்ள கணக்கு தான், இதில் மாற்றங்கள் எப்போது வேண்டுமானலும் வரலாம். 

Share this post with your friends