Mnadu News

கோயில், தண்ணீர்,சுடுகாடு பொதுவானதாக இருக்க வேண்டும்- மோகன் பகவத் பேச்சு.

தசரா விழாவை முன்னிட்டு நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மோகன் பாகவத், இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும் மதமாற்றத்தைத் தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும். எதிர்காலத்துக்கு ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக்கொள்கை மாணவர்களை பண்பட்டவர்களாக, தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும்; இது அனைவரின் விருப்பம். இதற்கு சமூகம் ஆதரவளிக்க வேண்டும். கோயில், தண்ணீர்,சுடுகாடு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் .அற்ப விஷயங்களுக்கு நாம் சண்டையிடக் கூடாது எனக்கூறினார்.

Share this post with your friends