முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நேந்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் டீ சர்ட் , ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் உள்ளிட்ட நாகரீகமற்ற ஆடைகள் பக்தர்கள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த உத்தரவுகளை விரைவில் நடைமுறைப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவுகள் கோவிலில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கோவில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன் கூட்டாக பேட்டி மூலம் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More