தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை…சிலிண்டர் விபத்து என போலீசார் கூறினர். அதை பயங்கரவாதிகளின் தற்கொலை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தான் முதன்முதலில் தெரிவித்தார். சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீடு மற்றும் அவர் நண்பர்களின் வீடுகளில் வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் வாயிலாக கோவையில் நடக்க இருந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் இனி ஏற்படாமல் இருப்பதுடன், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், வரும் 31ஆம் தேதி கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை, முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். என்று அந்த பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More