Mnadu News

கோவை கார் வெடிவிபத்து: என்ஐஏ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை.

தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சரின் அறையில், கோயம்புத்தூர் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவையில் கரும்புக்கடை உள்ளிட்ட இடங்களில் புதிய காவல்நிலையங்களை அமைக்கவும், கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்திடவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
,அதோடு;, மாநிலம் முழுவதும் சிசிடிவி காட்சிகளை அமைத்து குற்றச்செயல்களை தடுக்கவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவில் தெரிவித்துள்ளார.;
கோவையில் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டிருந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால், உடனடியாக இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More