கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையினர் மீது குறைகள் சொல்லக்கூடாது. கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும.;
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்கிறது.
ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளம், கர்நாடகம் , ஆந்திரம் போன்ற பல மாநிலங்களில் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் குரல் கொடுப்போம் என்று தெரிவித்து உள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More