கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த 28 வயதான ஜெயந்தி கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இயங்கி வரும் மாநிலங்களவை உறுப்பினர் பி.டி .உஷாவின் அகாடமியில் கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சியாளர்களாக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயந்தியின் தாயாருக்கு தொலைபேசி வாயிலாக ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாக அகாடமி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து கேரளா போலீசார் அங்கிருந்த மூன்றாம் நபரிடம் புகார் மனு பெற்று வழக்கு பதிவு செய்து ஜெயந்தி உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைத்து உள்ளனர். அதனைத்தொடர்ந்து ஜெயந்தியின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான தொண்டாமுத்தூரில் தகனம் செய்தனர். இதுகுறித்து பேசிய ஜெயந்தியின் உறவினர்கள் ஜெயந்தி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More