வெந்து தணிந்தது காடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக அவருக்கு அன்பு பரிசாக புல்லட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளார் இஷரி கணேஷ் கொடுத்துள்ளார்.

பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல பேட்டிகளில் ஏற்கனவே கூறிய நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என கெளதம் மேனன் உறுதி செய்துள்ளார். வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்காக அவர்கள் காத்துள்ளனர்.
