மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான க்யூட்-பிஜி தேர்வு ஜூன் மாதம் 5 முதல் 12-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க முன்னர் ஏப்ரல் 19 கடைசி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து என்டிஏ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான க்யூட் தேர்வு ஜூன் 5,6,7,8,9,10,11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள மாணவர்கள் தொடர்ச்சியாக என்டிஏ வலைதளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என்றார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More