Mnadu News

சஞ்சய் தத் பிறந்த நாள் பரிசாக “லியோ” படக்குழு செய்த சம்பவம்!

லோகேஷ் கனகராஜ்: 

மாநகரம் படத்தின் வாயிலாய் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தமக்கென்று ஒரு பாணியை கையில் எடுத்து அதில் தனது ஸ்கிரீன் பிளே ஆற்றலை கொண்டு வந்து ரசிகனை இருக்கை முனையில் அமர வைப்பதில் திரை சாகசக்ககாரன். ஆம், அடுத்தடுத்து ஈட்டி போன்று திரை கதைகளை, திரை மாந்தர்களை உருவாக்கி நம்மை பித்து பிடிக்க வைத்தவர் தொடர்ச்சியாக தமது திரை பங்களிப்புகள் மூலமாக. 

லோகேஷ் சினிமேடிக் யுனிவர்ஸ்: 

மாநகரம் படத்துக்கு பின் தனக்கென்று ஒரு சினிமா உலகை உருவாக்கி அதை (LCU) என பெயரிட்டு ஒரு படத்தில் வரும் கதை மாந்தர்களை இன்னொரு படத்தில் கோர்த்து அதில் ஒரு புதிய திரை கதையை பின்னி இன்னொரு படைப்பை உருவாக்கும் வித்தகன். இது தான் இப்போதைய ஹாட் டாபிக். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த உச்சங்களை கண்டு வருகிறார். இப்போது பல மொழி நடிகர்களும் இவருடன் எப்படியாவது ஒரு படத்தில் பணிபுரிய வேண்டும் என ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். 

லியோ பாடலில் LCU ஹின்ட்: 

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடி” நேற்று வெளியாகி கிட்டதட்ட 2 கோடி யூடியூப் பார்வைகளை பெற்று விட்டது குறுகிய காலத்தில், ஆம் விஜய்யின் குரலில் அனிருத் இசையில், பாரெங்கும் இப்பாடல் பட்டையை கிளப்பி வருகிறது. லியோ படம் lcu வில் வருமா என பலரும் வினவி வந்த நிலையில், பாடலின் பல இடங்களில் அதன் சாயல் தெரியவே செய்கிறது. 

இந்த நிலையில் லியோ ஷூட்டிங் முழுதும் நிறைவடைந்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் தமது உதவி இயக்குனர்கள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு 125 நாட்கள், 6 மாதங்கள் என குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

மேலும், லியோ படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள லோகேஷ், இந்த பயணம் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்றும், ஒருபோதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ்ஜின் இந்த ட்வீட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் அடுத்த அப்டேட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அதில் நடித்துள்ள சஞ்சய் தத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ரோலை அறிமுகம் செய்யும் விதமாக படக்குழு முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. லியோ படத்தில் “ஆண்டனி தாஸ்” என்கிற ரோலில் இவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Link : https://youtu.be/O27I_g_xqLI

Share this post with your friends