சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 337 அறிவிப்புகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளன. அறிவிப்புகள் மீதான தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல் அமைச்சர் குறிப்பிடடுள்ளார்.
மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. காலை உணவு, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் 2 ஆயிரத்து 200 கோடி வழங்கப்பட்டு 4 ஆயிரத்து 67 கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தப்படும் என்று கூறிய அவர், 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 55 ஆயிரத்து 567 கிலோ மீட்டர் சாலைகளில் 6 ஆயிரத்து 45 கிலோ மீட்டர் நீள சாலைகள் சேதமடைந்துள்ளதாக சூறி உள்ளார்.
500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;. பேருந்துகளில் இலவசமாக பயணித்ததன் மூலம் மகளிருக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பாக மாறியுள்ளதாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின உரையாற்றி உள்ளார்.