சந்திரமுகி :
2005 ஆம் ஆண்டு தலைவர் ரஜினி நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது “சந்திரமுகி”. ஆம், இந்த படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஸ்பெஷல் திரைப்படமாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

தற்போது மீண்டும் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் லீட் ரோலில் நடித்து வருகிறார். கதைப்படி, சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதல் தான் திரைக்கதை என சொல்லப்படுகிறது.

சந்திரமுகியாக கங்கனா :
குறிப்பாக, படத்தின் முக்கிய ரோலாக பார்க்கப்படும் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அதோடு, வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். “ஆர்.ஆர்.ஆர்” படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் உருவாகி வருகிறது. மெகா பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஷூட்டிங் நிறைவு :
பலகட்டங்களாக சந்திரமுகி 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெற்றதால், பிரி புரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளன.

ஆடியோ வெளியீடு மற்றும் ரீலீஸ் பிளான் :
அக்டோபர் 19 விஜய் நடிப்பில் “லியோ” படம் வருவதால், சந்திரமுகி 2 படக்குழு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆடியோ வெளியீட்டை வைத்துவிட்டு, படத்தை செப்டம்பர் 15 வெளியிட பிளான் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.