மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு திரைப்படங்கள் நடிகர் விக்ரமுக்கு தற்போது வரை வெளியாகி உள்ளது.
இந்த மூன்று படங்களில் பொன்னியின் செல்வன் படம் மட்டுமே நினைத்த அளவுக்கு வெற்றியை பெற்று தற்போது வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக திரை அரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், விக்ரம் திரைப்படங்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அப்படி, அவர் தேர்வு செய்துள்ள இயக்குநர் தான் பா.ரஞ்சித், தங்க சுரங்கத்தின் அரசியலை பற்றி பேசப்போகிறது இப்படம்.
ஆனால், இதில் சர்ச்சையை உருவாக்கி உள்ள செயல் என்னவென்றால் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இல்லை என்பது தான்.
மாறாக இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமாரை பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை ஜி வி தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதில் இருந்து தெளிவாக தெரிகிறது சாநா – பா.ரஞ்சித் இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளது என்று. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.