விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுபட்டியில் அ.தி.மு.க 51 ஆம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்திற்கு 18 மாதங்களில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என்றும் அதில் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டசபை கூட்டத்தொடரில் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நீதியின் பக்கம் இல்லாமல் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More