ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுக இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தாலும், 51-வது ஆண்டில் இன்று நுழைகிறது. இந்த தொடக்க விழாவையொட்டி, அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த ஒ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது கூண்டில் அடைத்து வைத்திருந்த புறாவை வெளியே எடுத்து ஓ.பன்னீர் செல்வத்திடம் தொண்டர்கள் கொடுத்தனர். பின்னர், அந்த புறாவை ஓபிஎஸ் பறக்கவிட்டார். கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழாவில் சமாதான புறாவை ஓபிஎஸ் பறக்க விட்டுள்ளது, ஒன்றுபட்ட அ.தி.மு.க மீண்டும் உருவாக ஓ.பி.எஸ் முயல்வதை காட்டுவதாக உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுவதாக கூறப்படுகின்றது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More