Mnadu News

சரக்கு ரயிலின் 53 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.

ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் ரயில்வே மண்டலத்தில் உள்ள சோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே கோட்டத்திற்கு இடையே உள்ள குர்பா ரயில் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்பட்ட சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென இன்று காலை 6.45 மணியளவில் சரக்கு ரயிலின் 53 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெட்டிகளில் இருந்த நிலக்கரி அனைத்தும் ரயில் பாதையில் கொட்டியது. சரக்கு ரயில் அடுத்த தண்டவாளத்தில் கவிழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்ல வேண்டிய, வரவேண்டிய ரயில்களின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயம் ஏற்படவில்லை என மத்திய கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ரயில்வே மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலைமையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் ரயில் சேவையை சீரமைக்க பல மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால், சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More