இரண்டு வருட உழைப்புக்கு பிறகு “சர்தார்” திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தேசிய உளவாளி மற்றும் காவல்துறை அதிகாரி ரோல் என இரண்டிலும் அசத்தி இருக்கிறார்.
இந்த திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கவே திரை அரங்குகளில் காட்சிகளும் கூடியுள்ளன. இதுவரை சர்தார் திரைப்படம் சுமார் 5 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.
ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த படக்குழு, இந்த படத்தின் லவ் டூயட் பாடலான ” மேரி ஜான்” பாடலின் லிறிக் வீடியோவை வெளியிட்டு உள்ளது. ஆகாஷ் ஆசிஸ் குரலில், ஜிகேபி வரிகளில், ஜி வி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகி உள்ளது.
சாங் லிங்க்: https://youtu.be/6DZv2YAsZsg