Mnadu News

சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று ரீலீஸ்!

தமிழ் சினிமாவின் நல்ல நடிகராக வளர்ந்துள்ள நடிகர் கார்த்தி. கமர்ஷியல் படங்களும் சரி, கதை முக்கியத்துவம் வாய்ந்த படங்களும் சரி எதுவானாலும் அதில் இறங்கி அடிப்பதில் இவர் கில்லாடி எனலாம்.

சமீப காலங்களில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஹிட் மேல் ஹிட் அடிக்க. தனது அடுத்தடுத்த படங்களின் கதை தேர்வில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அப்படி, இரும்புதிரை, ஹீரோ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த P.S.மித்ரனுடன் கூட்டணி அமைத்துள்ளார் கார்த்தி.

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார்.
கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். சிம்ரன் ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான படத்தின் டீஸர் யூடியூப் இல் டிரெண்ட் ஆன நிலையில், இன்று மாலை 5 மணிக்கு “சர்தார்” படத்தின் “ஏறு மயிலேறி” என்ற முதல் சிங்கிள் வெளியாக உள்ளது. இப்படம் வரும் 21 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது குறிப்பிடத் தக்கது.

Share this post with your friends