பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி,ராசி கண்ணா, முனீஷ்காந்த், லைலா, இளவரசு என பலர் நடித்து இன்று வெளியாகி உள்ள படம் தான் “சர்தார்”.
நாட்டின் உளவாளியாக இருக்கும் சர்தார் தான் சென்ற இடத்தில் காவலர்கள் அவரை சிறைப்பிடித்து விடுகின்றனர். அங்கிருந்து தப்புகிறார் சர்தார். இதற்கிடையில், சர்தாரின் மகன் விஜய் பிரகாஷ் சென்னையில் காவலராக பணியாற்றுகிறார்.
உளவாளிகளை பற்றிய கோப்பு திருடப்படுகிறது அதை காவலர் விஜய் பிரகாஷ் கைப்பற்றும் போது அவருக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. அதன் பின் என்ன நடந்தது? சர்தாரும் விஜய் பிரகாஷ் சந்திப்பு நிகழ்ந்ததா? சர்தார் ஏன் சிறை பிடிக்கப்பட்டார் போன்ற பல கேள்விகளுக்கான விடையே மீதி கதை.
இன்று வெளியான இப்படம் ரசிகர்களை ஈர்த்து உள்ளது. எல்லா பக்கங்களிலும் பாஸிடிவ் விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், சர்தார் படம் வெளியாகும் முன்னமே ஆன்லைன் ஓடிடி தள ஸ்ட்ரீமிங் உரிமையை ‘ஆஹா’ நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.