“ஜெயம்” படத்தில் துவங்கிய ரவியின் பயணம் தற்போது வேறு ஒரு உச்சத்தில் உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்றே சொல்ல வேண்டும். அடங்க மறு, பூமி, டிக் டிக் டிக் போன்று பல படங்களை அவர் நம்பி அது பெருத்த ஏமாற்றத்தையே தந்தன.

ஆனால், சென்ற மாத இறுதியில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் அவருக்கு மீண்டும் புதிய வழியை ஏற்படுத்தி தந்துள்ளது. அதாவது அவரின் சம்பளம் மற்றும் மார்கெட் மதிப்பு உயர்ந்துள்ளது.

இவர் நடிப்பில் அடுத்த வருடம் பல படங்கள் வெளியாக உள்ளது. இறைவன், ஜன கண மன, அகிலன் இவை வெளியீட்டுக்கு ரெடி. அதே போல இன்னும் பல படங்கள் லைன் அப்பில் உள்ளன.
