Mnadu News

சலூன் கடை ஓனராக கலக்கும் ஆர் ஜே பாலாஜி! கோகுல் – வேல்ஸ் கூட்டணியில் உருவாகும் “சிங்கப்பூர் சலூன்”!

ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா ஆகிய படங்களின் மூலம் தனித்துவ திரைக்கதை அமைப்பில் படங்களை இயக்கும் இயக்குநர் என பெயர் பெற்றவர் “கோகுல்”.

ஆனால், ஜூங்கா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு தரவில்லை, அத்தோடு கொரோனா குமார் படமும் கிடப்பில் இருக்கும் நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பு நேற்று வெளியானது.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில்
ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கோகுல் இயக்குகிறார். அடுத்த வருட கோடை விருந்தாக இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

அதே போல வெகு விரைவில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends