ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களின் மூலம் தரமான கமர்ஷியல் பிளாக் பஸ்டர் இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் இயக்குநர் அட்லீ. தற்போது இவர் ஷாருக்கான் ஐ வைத்து
“ஜவான்” படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், அட்லீ நடிகர் சல்மான் கானுக்கு நகைச்சுவை கதை ஒன்றை சொல்லி ஓகே செய்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதிலும் அனிருத் தான் இசையமைப்பாளர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஷாரூக் கான் படத்தை முடித்த உடன் இந்த படம் துவங்கப்படலாம் என தெரிகிறது.
ஆனாலும், தளபதி 68 படத்தை அட்லீ இயக்க போவது உறுதி என்ற தகவலும் உள்ளதால் எந்த படம் முதலில் உருவாக போகிறது என்பது தளபதி 67 படம் நிறைவடையும் தருவாயில் தெரிய வரும். அப்படி விஜய் 68 நடக்கும் பட்சத்தில் அதை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பது உறுதி ஆகியுள்ளது.