அண்மையில் தனக்கு வந்த கொலை மிரட்டல்கள் தொடர்பாக துபாயில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சல்மான் கான், துபாயில் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். எனக்கு இங்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இந்தியாவில்தான் எனக்கு பிரச்சினை. இந்தியாவில் நான் மிகவும் கவனத்துடன் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டியுள்ளது” என்று பேசியிருந்தார்.இந்நிலையில், சல்மான்கானின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “சல்மான் கானுக்கு மும்பையிலோ, இந்தியாவின் மற்ற எந்த பகுதியிலோ எந்த பிரச்சினையுமில்லை. அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மும்பை மிகவும் பாதுகாப்பான நகரம். அவர் கவலைப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More