ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்திநகரை சேர்ந்த ஞானசிந்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்க்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் எனது கணவர் முனீஸ்வரன்(34) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியா நாடான கத்தீப்பில் மீன்பிடி தொழில் செய்ய சென்றார்.
.ஆனால் கடந்த 11ஆம் தேதி மாலை 6 மணியளவில் இறந்து போனதாக அவருடைய உறவினர் விமல் மூலமாக தகவல் வந்தது. வெளிநாட்டில் இறந்துபோன தனது கணவர் முனீஸ்வரன் உடலை எனது சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்து போன முனீஸ்வரனுக்கு 3 வயதுடைய இசை அமுதன் என்ற ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.