ஹீரோ சந்தானம் திரை துறையில் ஜெட் வேகத்தில் படங்களில் நடித்து வருகிறார். சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், குலு குலு ஆகிய படங்கள் வெளியாகின.
இந்த அனைத்து படங்களுமே கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றன. எதிர்பார்த்த வெற்றியை இப்படங்கள் பதிவு செய்ய தவறின.

கட்டாய வெற்றியை பெற வேண்டிய சூழலில் சந்தானம் இருக்கிறார். விசில், ஆரஞ்சு போன்ற கன்னடப் படங்களை இயக்கிய இயக்குநர் பிரஷாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம், தான்யா ஹோப், பாக்கியராஜ், செந்தில், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “கிக்”.

அண்மையில் சந்தானம் பாடிய “சட்டர்டே இஸ் கமிங்கு” பாடல் அர்ஜுன் ஜன்யா இசையில் ஹிட் அடித்தது. ஒரு முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.
