Mnadu News

சாமை ஆப்பம்

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி                           : 100 கிராம்

உளுந்து                                     : 15 கிராம்

வெந்தயம்                                : 1 ட்யூஸ்பூன்

தேங்காய்த் துருவல்            :  50 கிராம்

உப்பு                                            : தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் குறைந்தது 8 மணிநேரம் ஊற  வைக்க வேண்டும். ஊறிய அரிசி உளுந்து வெந்தயத்தை நன்கு மழிய அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுக் கலவை புளிப்பதற்கு எட்டு மணிநேரம் வரை எடுத்துக் கொள்ளும். எனவே காலையில் அரிசியை ஊறவைத்தால் மாலை அல்லது இரவு அரைத்து மறுநாள் காலை புளித்துவிடும். புளித்த மாவை எடுத்து ஆப்பக் கடாயில் ஆப்பத்தை சுட்டால் சாமை அரிசி ஆப்பம் தயார்.

ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால் நன்றாக இருக்கும். கேரளா போன்ற இடங்களில் கொண்டைக்கடலை குருமாவையும் ஆப்பத்திற்கு பயன்படுத்துவார்கள்.

மருத்துவ பலன்கள்:

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அரிசியை விட ஏழுமடங்கு நார்ச்சத்துகளை கொண்டது. நீரிழிவு நோய் உள்ளவர்களும், நீரிழிவு நோய் வருவதை விரும்பாதவர்களும் சாமையை நாடுவது நலம் பயக்கும்.

அனைத்து நோய்களுக்கும் மூலதானமாக கருத்தப்படும் மலச்சிக்கலுக்கு இது மிகப்பெரிய தீர்வை தருகிறது. உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை எளிமையாக வெளியேற்றுகிறது. இரத்தசோகையை நீக்குகிறது. வளரும் பருவ பெண்கள் சாமையை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சத்துக்கள்:  நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாதுப்பொருட்களின் ஊக்கி,

Share this post with your friends