உத்தரகண்டில் இந்தாண்டு அட்சய திருதியை அன்று சார்தாம் யாத்திரை தொடங்கியது. அதில் யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய இரண்டு தலங்களும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தைச் 62 வயதான சேர்ந்த கனக் சிங் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான தினேஷ் படிதாரஆகிய இருவரும் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.சார்தாம் யாத்திரை தொடங்கிய முதல் நாளிலேயே இருவர் உயிரிழந்திருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,கடந்தாண்டு அமர்நாத் பயணத்தின்போது 300 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ,...
Read More