Mnadu News

சிட்டு குருவியை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

26 விதமான சிட்டுக்குருவி இனங்கள் இருந்திருந்தது அதில் வெறும் 5 மட்டுமே இப்பொது கண்டறியப்பட்டுள்ளது. நமது வாழ்வியல் மாற்றமே சிட்டுக்குருவிகள் அழிவதற்கு காரணமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுவே உண்மை.

கிராமத்தைக்காட்டிலும் நகரத்தில் சிட்டுக்குருவிகளை காண முடிவதில்லை ஏன் என்று யோசித்தீர்களா? கிராமத்தில் போன்கள் அந்த அளவிற்கு பயன்படுத்துவதில்லை அப்படியே பயன்படுத்தினாலும் நகர மக்களை போல 24 மணி நேரமும் Wifi ஆன் செய்து வைத்திருக்க போவதில்லை. ஆம், செல்போன்களில் ஏற்படும் electromagnetic fields மற்றும் radiation போன்ற கதிர்வீச்சு சிட்டுக்குருவியின் நோயெதிர்ப்பு மற்றும் நரம்பு மண்டலதில் ஊடுருவி  பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், செல்போன் டவரினால் மட்டும் சிட்டுக்குருவி அழிவதில்லை, என்றும் அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது என்று கூறுகிறார்கள். உணவு மற்றும் இருப்பதற்கு இடம் இல்லாத காரணத்தினாலும் பெரிய அளவில் சிட்டுக்குருவிகள் அளிக்கிறது என்று ஆய்வில் கூறுகிறது. சிட்டுக்குருவியின் ஆயுள்காலம் 13 ஆண்டு ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 4 அல்லது 5 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றது.

முந்தைய காலத்தில் வீட்டில் முன் போடும் பச்சை அரிசி கோலம், பலசரக்கடையில் சிந்தி கிடைக்கும் அரிசி மற்றும் தானியங்கள் என சிட்டுகுறுக்கிகளுக்கு உணவிற்கு பஞ்சமே இருக்காது. ஆனால் இப்போ அந்த வழக்கங்கள் எல்லாமே மாறிவிட்டது பலசரக்கடை கூட குளுர் சாதனமாக மாறிவிட்டது. சிட்டுக்குருவிகள் சாப்பிடும் திணை, சாமை, கேழ்வரகு, கம்பு போன்ற சிறு தானியங்கள் குருவிகளுக்கு சாப்பிட கிடைப்பதில்லை. மேலும் புழு,பூச்சிகள்,வெட்டுக்கிளிகள் போன்றவற்றையும் சாப்பிடும், ஆனால் பூச்சி மருந்துகள் அடிப்பதால், சிட்டுக்குருவிகள் சாப்பிடும் அந்த சிறுபூச்சிகளும் அதற்கு மிஞ்சுவதில்லை.

அந்த காலத்தில், பறவைகள் கூடுகட்டுவதற்கு மரங்கள்,தோட்டங்கள் வீடுகளில் இருக்கும் பரண்,மச்சு போன்ற இடங்களில் கூடு கட்டி வாழும், ஆனால் தற்போது மரங்களை அழித்து வீடுகளை கட்டிவிட்டோம்.குருவிகளுக்கு வீடு  இல்லாமல் பொய் விட்டது.

சிட்டுக்குருவிகளின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை மார்ச் மாதம் 20-ந் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக 2010-ம் ஆண்டு அறிவித்தது. எனவே மார்ச் 20-ந் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர்.

Share this post with your friends