ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பின் கூட்டம் அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுவதாக இருந்தது. இதில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடோ ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில், இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ், “இந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் இல்லாமல் குவாட் மாநாடு நடைபெறாது. எனவே, கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More