கர்நாடகத்தில் முதல் அமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், மற்றும் முன்னாள் முதல் அமைச்சர்; சித்தராமையாவுக்கு இடையே போட்டி நீடித்து வருகிறது. இந்நிலையில், சித்தராமையா இல்லத்தின் முன்பு கூடிய அவரின் தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அதோடு மட்டுமல்லாமல் அவரின் இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகைகளுக்கு பாலூற்றி அபிஷேகம் செய்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ;.இதனால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More