நயன்தாராவை பற்றி ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சிற்கு பல்வேறு பிரபலங்கள் பெரும் கண்டனத்துக்குரியது என கருத்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர் . மேலும் இந்த சர்ச்சைகுரிய பேச்சானது திரை உலகினருக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானது என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் meeto விவகாரத்தின் போது மௌனம் காத்தவர்கள் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் மட்டும் முன் வருவார்களா என்ற கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கோவமாக பதிவிட்டிருந்தார் .
https://twitter.com/Actor_Siddharth/status/1109952385676382209
இதற்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆரம்ப காலத்தில் முதலே பெண்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் .சில சமயங்களில் அவர் செய்யும் நல்ல விஷயங்களை வெளி உலகிற்கு காட்டவில்லை என்று சித்தார்த் பதிவிட்ட பதிவிற்கு விக்னேஷ் சிவன் அதிரடியாக பதிவிட்டுள்ளார் .
With all due respect to you @Actor_Siddharth and ur opinion .. pic.twitter.com/C8uo2DDlzg
— Vignesh Shivan (@VigneshShivN) March 25, 2019