கடந்த மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்த சித்துவின் தந்தை சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை , உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கின் முதல் கட்டமாக 8 பேரை கைது செய்து விசாரித்து வந்த காவல்துறை பின்னர் பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்தனர்.
அதோடு, பிஷ்னோய் கூட்டாளிகள் இருவர் பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தர் மாவட்டத்தில் உள்ள சீச்சா பக்னா மாவட்டத்தில் பதுங்கியிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சந்தீப் என்பவரை சிறப்பு காவல் பிரிவினர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்துள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More