பிரபல பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான சித்து மூஸ்வாலா சென்ற வருடம் மே 29 ஆம் தேதி மர்ம நபர்களால் மன்சா மாவட்டத்தில் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அவருக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு பாதுகாப்பு நீக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இந்த கொலை சம்பவத்துக்கு கனடாவை சேர்ந்த கூலிப்படை தலைவரான கோல்டி பிரார் பொறுப்பேற்பதாக அறிவித்தார்.
இவர் கனடாவில் வசிப்பதாக கூறப்படும் நிலையில், தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இவர் முக்கிய இடத்தில் உள்ளார். சித்து மூஸ்வாலாவை தானே கொலை செய்ததாக பிரார் அதிர்ச்சியூட்டும் வகையில் உண்மையை கூறியுள்ளார். அதன்படி, தானே அந்த கொலையை செய்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
சித்து மூஸ்வாலா ஒரு ஆணவமான நபர் என்பதால் அவரை கொலை செய்வது என கருதினோம் என கூறி அதிர்வை ஏற்படுத்தி உள்ளார்.