Mnadu News

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு கால் பதிக்கவுள்ளார் வாணி போஜன்

தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் பல கதாபாத்திரத்தில் நடித்து வந்த வாணி போஜன் அவர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தெய்வமகள் நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்து அவரது நடிப்பின் மூலம் இவருக்கென பல ரசிகர்களை கொண்டு பிரபலமடைந்தவர் தான் நடிகை வாணி போஜன்.

அந்த தொடருக்கு பிறகு மீண்டும் பல நிகழ்ச்சிகளில் வளம் வந்த வாணி போஜனுக்கு தற்போது பெரிய திரையில் கதாநாயகியாக கால் பதிக்க வாய்ப்பு வந்துள்ளது . சரோஜா, கப்பல் சமீபத்தில் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி நாயகனாக வளம் வரும் வைபவ் உடன் கதாநாயகியாக கைகோர்க்க உள்ளார் நடிகை வாணி போஜன் .

 

Share this post with your friends