‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற படத்தை அடுத்து சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . கடைசியாக சென்னை 28 இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ள வெங்கட் பிரபுவின் பார்ட்டி படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து ரிலீஸ் ஆகாமல் உள்ள நிலையில் ,இவர் தற்போது சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கவுள்ளார் .
தற்போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் தற்போது ஜெய் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் ஏற்கனவே சிம்புவுடன் ஜெய் இணைந்து சேர்ந்துள்ள ‘வேட்டை மன்னன் ‘ என்ற படம் இவர்கள் இருவரும் நடிக்க இருப்பதாகவும் ஆனால் அந்த படம் எதிர்ப்பாராத வகையில் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது . இந்த நிலையில் இருவரும் மீண்டும் கைக்கோர்க்க இருப்பது குறிப்பிடத்தக்கது.