புதுச்சேரி காலாபட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் புதிதாக 5 ஏக்கர் நில பரப்பில் மாதிரிக்கன்றுகள் தயாரித்து விளை நிலத்தில் பேரிட்சை, கொய்யா, மாதுளை, வாட்டர் ஆப்பிள், பப்பாளி, எலுமிச்சை, அத்தி மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவைகளை சிறை கைதிகள் பயிரிட்டுள்ளனர். இதனை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறை வளாகத்தில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம், சிறை துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகர், உள்ளிட்ட சிறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் புதுச்சேரியில் தண்டனை காலத்தை முடித்து வரும் சிறைவாசிகளுக்கு வேளாண்துறை சார்பில் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.