துணிவு திரைப்படத்தில் இருந்து வெளியான சில்லா சில்லா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி 15 மில்லியன் பார்வைகளை அள்ளி உள்ளது. உலகமே இந்த பாடலை கொண்டாடி வரும் நிலையில் இதன் பரபரப்பு அடங்குவதற்குள் செகன்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை ஜிப்ரான் நேற்று தமது டிவிட்டர் பக்கத்தில் தட்டி விட்டு கவனத்தை பெற்றுள்ளார்.

காசேதான் கடவுளடா என்று மட்டும் போஸ்ட் செய்து இணையத்தை அலற விட்டுள்ளார். ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், செகன்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைசக் வரிகளில், ஜிப்ரான் இசையில், ஹிப் ஹாப் ஆதி இந்த பாடலை பாடி உள்ளார். இந்த பாடல் இன்னும் என்ன சம்பவம் செய்ய போகிறது என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
