கர்நாடகாவில் அண்மையில், 212 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பிறகு அதிருப்தியடைந்த சிலர் பாஜகவிலிருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்க ளிடம் பேசியுள்ள கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, 60 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சரியான வேட்பாளர்கள் இல்லை. அந்த இடங்களில் பாஜகவிலிருந்து விலகி சென்றவர்களை காங்கிரஸ் நிறுத்துகிறது. சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், தொண்டர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள். அவர்கள் கட்சிக்காக உழைப்பதில் ஈடுபாட்டுடன் உள்ளனர். எங்களது கட்சி வலிமையாக உள்ளது. மக்கள் எங்களது வெற்றியை உறுதிப்படுத்துவார்கள் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More