Mnadu News

சிவகார்த்திகேயன் சிபாரிசில் தளபதி 63 படத்தில் இணையும் காமெடி நடிகர்

இளம் வெற்றி இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும், பெயர் வைக்கப்படாத படம் தான் தளபதி 63 . இத்திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . உச்சத்தை நோக்கி பயணிக்கும் வெற்றி நாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் தான் எனக்கு இத்திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கி தந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார் தாடி பாலாஜி . மேலும் தளபதியுடன் சச்சின் படத்தில் நடித்த அந்த அனுபவத்தையும் சொல்லியிருந்தார் . பல பிரச்சனைகளிலும் பல சர்ச்சைகளுக்கும் சிக்கி இருக்கும் தாடி பாலாஜிக்கு இத்திரைப்படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .’

 

Share this post with your friends