மஹாராஷ்டிராவில் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால், அங்கு ஆட்சி கவிழ்ந்தது. பிறகு பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல் அமைச்சராக பதவியேற்று உள்ளார். இந்நிலையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த சஞ்சய் ராவத் வெளியிட்ட அறிக்கையில் ,சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை பெற 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த தொகை ஆரம்ப புள்ளிதான். இது 100 சதவீதம் உண்மை. தனது கூற்றுக்கு ஆதாரம் உள்ளது. விரைவில் வெளியிடுவேன். ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக உள்ள கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் என்னிடம் இதனை கூறினார்” என்று அவர் கூறியுள்ளார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பு, ‘சஞ்சய் ராவத் எப்போது ‘கேஷியர்’ ஆனார்’ எனக்கேள்வி எழுப்பி உள்ளது.

சிற்றுந்து, பெண்களுக்கான கிளினிக்குகள் :டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.
டெல்லி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான...
Read More