சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என தனித்துவ படைப்புகளைப் கொடுத்து வருபவர் இயக்குநர் மிஷ்கின். இயக்குவதோடு மட்டும் அல்லாமல் நடிப்பதும் அவர் பிடித்ததே. சவரக்கத்தி என்ற படத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

தேசிய விருது இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “மாவீரன்”. ஆடை, மண்டேலா ஆகிய படங்களுக்கு இசை அமைத்த பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசை அமைக்கிறார்.

தற்போது வந்திருக்கும் புதிய தகவல் என்னவென்றால் சிவாவுக்கு மிஷ்கின் வில்லனாக ( அரசியல்வாதி) ரோலில் நடிகிறார் என்பது தான் அது. அதை மிஷ்கின் ஒரு நேர்காணலில் உறுதி படுத்தி உள்ளார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.
